தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள் - Latest collections of Kavithai and Quotes in Tamil - Tamil Social Media கவிதை for Stories and Status.

Tamil Copied Kavithai - Kavithai index Collections

Disclaimer

All Kavithai and Quotes are Copied from Different Social Profiles and Pages we have not Owned any date or Content it's Just a Database for collecting My Favourite Tamil SMS and Tamil Kavithai.

it contains Tamil kavithai and Tamil Quotes From Different Categories. All are Copied from Twitter Profiles.

Tamil Social Media கவிதை

ஏமாற்றம் ஒன்றும்
புதிதல்ல
ஏங்கிதவிக்கும்
இதயத்திற்கு
ஏமாற்றும் விதம்
தான் புதிது


புரிதல் என்பது
வார்த்தைகளில் அல்ல
உணர்வுகளில் ஒன்றி
இருக்க வேண்டும்


ஞாபகங்கள்
அழிக்கபடுவதில்லை
மாறாக ஆழமாக
விதைக்கபடுகின்றன


சில சூழ்நிலைகளை
கடந்து செல்ல
உடல் வலிமையை விட
மன வலிமையே
அதிகம் தேவைப்படுகிறது


பிடித்து போனதாய்
எல்லோரையும்
மனதினில் விதைக்காதீர்கள்
பின்னொரு நாளில் சிலர்
முட்களாகவும் குத்துவார்கள்


நினைத்திருக்கவில்லை
இறந்த காலத்தில்
இத்தனை ரம்மியம்
இருந்திருக்குமென்று
கடந்த நாட்களெல்லாம்
வெறும் நினைவுகளாய்
போய்விடுமென்றும்


சில உறவுகள்
பளீரென மின்னலாய்
வந்து அதிரடியாக
பல மாற்றங்களை
செய்து விட்டு
சென்று விடுகிறார்கள்
நம் வாழ்க்கையில்


உளறல்கள் கூட
கவிதையாகிறது
சில நேரங்களில்

--

கஷ்டங்களை
தாங்கும் சக்தி
அற்று போனதால்
கண்கள்
உருகி வழிகிறதோ


எல்லாமே
சில காலம் தான்
அது உறவாக
இருந்தாலும் சரி
உயிராக
இருந்தாலும் சரி


வாழ்க்கையில்
பாதியில் வந்து
பாதியில் விட்டு
செல்பவர்களே அதிகம்


ஏமாற்றங்கள்
மிஞ்சினாலும்
எதிர்பார்ப்பை
நிறுத்தி
கொள்வதில்லை
மனது


சில வினாக்களுக்கு
பதில் நாம் மட்டுமே


அத்தனை
கேள்விகளுக்கும்
சிறந்த பதில்
மௌனம்


நீதான் முக்கியம்
என தொடங்கும்
உறவுகள் எல்லாம்
யார் நீ
என்று முடிகிறது


புன்னகையால்
கடந்திடுங்கள்
சில மாற்றங்களை
வலிகளை வலிமையாக்கும்
வல்லமை கொண்டவை அவை


வெற்றிடத்தின் வலி
உணரவில்லை என்றால்
அங்கு அன்பே இல்லை


உன்னிடம் தொலைத்த
என் நிஜத்தினை
எங்கே சென்று
தேடுவது


எதன் மீதும்
அதிக அன்பு வை
வைக்கிறோமோ
அதை நினைத்து
பலமுறை வருந்த
வேண்டிய நிலை வரும்


வெற்றிடத்தின் வலி
உணர்த்தவில்லை என்றால்
அங்கு அன்பே இல்லை


தான் மாறவில்லை
என்றாலும்
சூழ்நிலை ஒவ்வொரு
மனிதனையும்
மாற்றிவிடுகிறது


விடை தேடும்
பயணம் தான் வாழ்க்கை
சிலருக்கு விடை தெரியவில்லை
பலருக்கு வினாவே
புரியவில்லை


வாழ்க்கையில்
வரும் எதுவும்
சொல்லி விட்டு
வருவதில்லை
ஆனால்
வந்த எதுவும்
எதையோ
சொல்லி
கொடுக்காமல்
போவதில்லை


வாழ்க்கையில்
தவறாக தெரிந்த
பல முடிவுகள் இன்று
சரியாக தெரியலாம்
சரியாக தெரிந்த
பல முடிவுகள் நாளை
தவறாக தெரியலாம்


உரிமை இல்லாத இடத்தில்
ஓராமாக நிற்பதை விட
வெளியேறி விடுவது மேல்


கஷ்டம் கூட
இஷ்டம் ஆகிவிடுகிறது
ஆதரவாய் உன் தோள்
சாய்கையில்


விடைகள்
சில தேடுகையில்
வினாக்களே
பல எழுகின்றன
வாழ்க்கையில்


பேசிய வார்த்தைகள்
நினைவுகளாகவும்
பேசாத வார்த்தைகள்
கவிதைகளாகவும்


என்னிலடங்கும்
என் இதயத்துடிப்பில்
ஏனோ எண்ணிலடங்கா
உன் நியாபகங்கள்


ஆழமான
கடலில் இறங்குறதும்
ஆழமான அன்பில்
இறங்குறதும் ஒண்ணு தான்
கரை சேர்வது கடினம்


நான் நானாகவே இருக்கிறேன்
வளர்வதும் தேய்வதும்
உங்களின் பார்வையை பொறுத்தது


எதையுமே
எதிர்பார்க்காத போது
கிடைத்த அன்பு
எதிர் பார்க்கும் போது
தூரமானதேனோ


அன்பு வேண்டும் என்று
எவரிடமும் கெஞ்சாதீர்கள்
அது உண்மையாக இருந்தால்
நீங்கள் கையேந்த
வேண்டிய அவசியமில்லை


சில வரிகளில் கூறப்படும்
வலிகளின் ஆழம் எல்லோராலும்
புரிந்துகொள்ள முடிவதில்லை
உணர்வுபூர்வமாக
அனுபவப்பட்டவர்களை தவிர


உயிர்
எழுத்தாய்
இருந்தேன்
மெய்
எழுத்தாய்
வந்தாய்
உயிர்மெய்
எழுத்தானோம்


விமர்சனம் செய்வது உங்களுக்கு
வாடிக்கையாகிப்போன
ஒன்று தான்
உங்களோடு விவாதித்து
எனக்கு எந்த பயனும்
கிடைக்க போவதில்லை
ஆதலால் தான் கேட்டுவிட்டு
மவுனமாக
கடந்து செல்கிறேன்


எப்போதெல்லாம்
ஒரு வெறுமை ஆட்கொள்கிறதோ
அப்போதெல்லாம் துணையாக
சில கண்ணீர் துளிகள்


பேரன்பில்
உனக்கானது என்று
உணர்த்தப்படுவதை
விடவும்
தனக்கானது தான் என்று
உணரும் தருணங்கள்
பேரழகு


இணைவது எல்லாம்
என்றோ பிரிவதற்கே


வார்த்தைகளை மட்டுமே
பு‌ரி‌ந்து கொள்பவர்களால்
ஒரு போதும் உணர்வுகளை
புரிந்து கொள்ள முடியாது


இரு விழிகளுக்கு
ஓய்வு தேவை
என தெரிந்து
உறங்கச் செல்லும் எனக்கு
தெரியவில்லை
ஓயாது நின் நினைவலைகளை
சுமக்கும் இதயத்திற்கும்
மனதுக்கும்
ஓய்வு தேவை என்று


(depression) மரணம் போல
தவிர்க்க முடியாதது
வாழ்வின்
ஏதோ ஒரு கட்டத்தில்
எல்லோரையும்
நிச்சயம் தாக்கும்


நீயாக நீயிருந்தால்
மற்றவர்களின் பார்வைக்கு
நீ திமிராகவே
தெரிவாய்


காயங்கள் என்றுமே புதிதல்ல
அதற்கான காரணங்கள் தான்
ஒவ்வொரு முறையும்
புதிதாய் இருக்கிறது


தொடர்புகளற்று
போன உறவுகள்
நினைவுகளாக மனத்திலும்
தொடர்பு கொள்ள முடியாத
தொடர்பு எண்களாக
தொலைபேசியிலும்


பிறரை
சரி செய்து கொள்ள
சொல்வதை விட
தன்னைத்தானே
சரி செய்து
கொள் முயல்வது சிறந்தது


சத்தமின்றி அழுதிடும்
இதயத்தை துளைக்கும்
கூர்மையான ஆயுதம்
மௌனம்


எழுதவே நினைகிறேன்
உன் மேலான
அத்தனை காதலையும்
அன்பே தேநீர்


ஒரு சொல்லில்
உடைந்து போவதெல்லாம்
இந்த அன்பில் ம‌ட்டுமே
சாத்தியம்


என் எழுத்துக்குள்
என்னை தேடாதீர்கள்
நான் இருப்பதுவோ
என் நிஜத்தில்


நம்ம வாழ்க்கையில்
என்னைக்காவது
ஒரு நாள் நல்லது
நடக்காமலா போய்டும்


மூளைக்கும் மனதுக்கும்
இடையிலான போராட்டத்தால்
நசுங்கிப் போவதென்னவோ
நிம்மதி மட்டும் தான்


சில உறவுகள்
பளீரென
வந்து அதிரடியாக
பல மாற்றங்களை
செய்து விட்டு
மின்னலாய்
சென்று விடுகிறார்கள்
நம்வாழ்வில்


அழகான
நொடிகளுக்குள்ளயே
பயணிக்கிறது
சில உறவுகள்
நினைவலைகளாய்


ஏழையாய்
வாழ்கையில் இருக்கலாம்
ஏக்கத்தோடு வாழ்ந்து
நரகத்தை
அனுபவிக்கக்கூடாது


எதிர்பார்ப்புகளோடும்
ஏமாற்றங்களோடும்
தொடரும்
வாழ்க்கை


சில மனித மனங்கள்
எவ்வளவு விந்தையானது
சில சூழல்களில்
சில நொடிகளில்
எல்லாம் மறந்து
அவர்கள் நிஜ முகங்களை
காண்பிக்கும் நேரங்களில்
குரூரம் நிறைந்திருக்கிறது


கலங்கும் வயதில்
குழம்பும் மனநிலையில்
மன அமைதிக்காக
நிம்மதியின்
தேடல்


தனித்து விடப்படும் போது
மனம் மரத்துப்போற அளவு
ஓர்‌ குரூரமான உணர்வை தரும்


பேரன்பின் இறுதியில்
எஞ்சியிருப்பதெல்லாம்
அளவில்லா வலி
யாருமில்லா தனிமை


வாழ்க்கையின் எதார்த்தங்கள்
புரியும் போது வலிகளில்
கண்கள் மௌனமாக
கண்ணீர் சிந்துகின்றன


மனதிற்குள் இருக்கும்
வலிகளுக்கு
பல நேரங்களில்
கண்ணீர் மட்டுமே துணையாக


சொல்ல முடியாத கதைகளின்
பின்னே வலிகள் ஏராளம்


சிரிப்பதற்கு மட்டும்
நாம் கற்று
கொள்ள வேண்டும்
அழுவதற்கு
நம்மை சுற்றி ‌இருக்கும்
பலரும் கற்று தருவார்கள்


வாழ்க்கையே கானல் நீராய் சிலருக்கு


கவிதைகளை மட்டுமே
பிறர் ரசித்துக் கொண்டாடும்
விதத்தில் எழுத முடியும்
உணர்வினை வரிகளாக்குதல் கடினம்


வாழ்வில்
இருள் சூழும் போதெல்லாம்
ஆறுதல் சொல்ல
யாரும் இருக்கப்போவதில்லை
நம் தன்னம்பிக்கை மட்டுமே
துணை நிற்கும்


எதுவும் எளிதாக இருப்பதில்லை கடந்து வர


எதுவுமே சரியில்லாத போதும்
எல்லாம் சரி ஆகிவிடாதா என்ற
எதிர்பார்ப்பில் வாழ்க்கை நகர்கிறது


மனிதன்
பல விஷயங்களில்
தோற்று
துவண்டு போனாலும்
துரோகத்தால் விழ்த்தப்படும்
போது தான்
உடைந்து போகிறான்


அன்பிற்கு அதிகம்
ஆசைப்படாதே
ஆரம்பத்தில்
மனச அள்ளுவாங்க
பிறகு மனச ரணமாக்கி
கொல்லுவாங்க


ஒருவரின்
அன்பை பெற
நாம் நம் சுயத்தை
இழக்கவேண்டுமானதாக இருந்தால்
அந்த அன்பு
நமக்கானதே இல்லை


தனித்து நின்றாலும் தனித்துவமாய் நில்


சின்ன சின்ன
சந்தோஷங்கள்
போதும்
வாழ்க்கையை
அழகாய் மாற்ற


சின்ன சின்ன
சந்தோஷங்கள்
போதும்
வாழ்க்கையை அழகாய்
மாற்ற


நாம் வாழும் போது
அன்பாய்
நான்கு வார்த்தை
பேசாதவர்கள்
நாம் இறந்த
பின்னர் அழுவதற்க்கு
கூடத்தகுதி இல்லாதவர்கள்நாம் வாழும் போது
அன்பாய்
நான்கு வார்த்தை
பேசாதவர்கள்
நாம் இறந்த
பின்னர் அழுவதற்க்கு
கூடத்தகுதி இல்லாதவர்கள்


உங்களை தோல்விகள்
ஓட ஓட துரத்தினாலும்
நீங்கள் ஓட்டத்தை
நிறுத்தி விடாதீர்கள்
இடையே வரும்
தோல்வியும் தடையும்
வெற்றியின் ஆரம்ப படிநிலைகள்


தொலை தூரமெனினும்
தொலைந்தே போகிறேன்
அன்பே
என் காதலில்


அன்பு இலவசம்
என்பதனாலே
அளவின்றி
அனைவருக்கும்
கொடுத்துவிடுகிறோம்


ஆத்திரத்தில்
சண்டை போடுகிறவர்களிடமும்
அதிகமாக கோவம்
கொள்கிறவரிடம் அன்பு
அதிகமாகவே இருக்கும்


உங்களை
நிராகரிக்கும் இடத்தில்
சிறு துரும்பாக கூட
இருக்க நினைக்காதீர்கள்


நேசிக்கும் இதயத்திற்கு
கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்
பாசத்திற்கு மாற்றாய் அது
வேறொன்றும் கேட்பதில்லை


நானே
தொலைத்து
போக நினைக்கிற
போதெல்லாம்
தொல்லை தருகிறது
அல்ப ஆசைகள்


மரியாதை கிடைக்காத
இடத்தை விட
அதீத மரியாதை
கிடைக்கும் இடங்களில்
கவனமாக இருத்தல் நலம்
உங்களுக்கான இடத்தில்
உறுதியாக இருங்கள்
பிறருக்கா இல்லாமல்


கொஞ்சம்
மனதை திறந்துதான்
வையுங்களேன்
நல்ல சிந்தனையில்
மனம் இணைந்தால்
கேடுகெட்ட சிந்தனைகள்
குறையுமாமே


அரங்கு நிறைந்த
காட்சிகளாக வெற்றி நடைபோட்டு
கொண்டிருக்கிறது
என் மனமென்னும்
திரையரங்கில் உன் நினைவுகள்


உங்களுக்கு உண்மையாய்
இருப்பவர்களிடம்
எதையும் மறைகாதீர்கள்
அது தெரிய வரும் போது
அவர்களால்
தாங்கிக் கொள்ளவே முடியாது