தமிழ் கவிதைகள் Collections - Tamil SMS in Tamil Font, Tamil kadhal kavithai, Tamil Motivational Quotes, Tamil Life Quotes for Social Status and Stories.

Tamil Twitter Kavithai and Tamil Social Media Kavithai

Tamil Kavithaigal

ஒன்றன் பின்
ஒன்றாக செல்லும்
எறும்புக்கூட்டம் போல
நம்பகத்தன்மையுடன்
இணைப்பிரியா
உறவு கிடைத்தால்
அதிர்ஷ்டத்தின்
மொத்த பலனும்
உங்களுக்கானவையே


கனவுகள் என்பது
அழகியல் பெட்டகம்
போல்
உறங்கும் இரவினை
அழகாக்க
படைக்கப்பட்டவைகள்
அவைகள்மெய்ப்பட
சாத்திய கூறுகள்
என்பது மிக மிக அரிது


காதலர்களுக்கு
இடையே
காத்திருத்தல்
என்பது அடுத்து
நிகழப்போகும்
தாங்க முடியாத
பிரிவிற்கான
ஒத்திகை நிகழ்ச்சி


யாரும் எதிர்பார்க்காத
அமைதியை
கையாளுவது என்பது
ஒரு புள்ளியில்
வெறுப்பாக மாறும்
அதீத அன்பின்
வெளிப்பாடு


ஆகச்சிறந்த
இரவு என்பது
கொண்டாட்டங்கள்
நிறைந்த
ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது
கனவிலும் சரி
நனவிலும் சரி


முயற்சிகள்
தோற்கும் கணத்தில்
மூச்சை விட்டு
மடிந்து விடாதே
மீண்டும் புதிய
பிறப்புடன் எழுந்து வா


மனசுல ஓடுற ஓராயிரம்
கவலைகளையும் சங்கடங்களையும்
தாண்டி வெளியுலகத்துக்கு தன்ன
ஒரு மகிழ்வாளனா காட்டுற அந்த
முகத்த மட்டும் எப்பவும் விட்றாதீங்க
உங்க பாசிட்டிவிட்டியோட மொத்த
கூட்டமைப்பும் அங்க தான்
குடி கொண்டு இருக்கு


மிகவும் குறைவான நண்பர்கள்
வட்டாரத்திற்கு மட்டுமே உங்கள்
வாழ்வில் நீங்கள் அனுமதி
கொடுத்திருக்கிறீர்கள் என்றால்
மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்
நாட்டம் என்பது உங்களுக்கு மிக
குறைவு அது ஒரு வகையில் நல்லதும் கூட


நம் சரியான
அணுகுமுறைகளை
தவறாக புரிந்து கொண்டு
அதற்கு நாம் சரியான
விளக்கம் அளித்தும்
அதையும் ஏற்றுக்கொள்ளாமல்
மீண்டும் மீண்டும்
தன் தவறான புரிதலை
முன் வைக்கும் நபர்களிடம்
இருந்து சற்று
விலகி இருப்பது
நமக்கு நன்று


என் அமைதியை
என் முதுகுக்கு
பின்னாலும்
என் முகத்திற்கு
முன்னாலும்
கேலியாக பேசுபவரை
நான் ஒரு போதும்
கண்டுகொள்வதில்லை
என் அமைதி
என்னுடைய பெரும்பலம்


எதிர்பாரா நேரத்தில்
எதிர்பாரா விதமாக நடக்கும்
நல்ல விஷயங்களில் என்றோ
எப்போதோ நீங்கள் செய்த
ஒரு நற்செயலின் புண்ணியம்
வெண்மை நிறம் கொண்ட
பாலில் ஒரு துளி தேன்
கலந்தது போல்
ஒன்றிணைந்து இருக்கிறது


கடந்து போகும் நிலைக்கு
மனம் பக்குவப்பட்டுவிட்டால்
தாங்க முடியாத விரக்தியின்
உச்சத்திற்கு சென்றாலும்
அதை ஒரு பொருட்டாக
எண்ண மாட்டோம்


தன் மேல் இருக்கும் தவறை
ஒருவன் சுட்டிக்காட்டும் போது
எவன் ஒருவன் அளவுக்கதிகமாக
கோபப்படுகிறானோ அவனிடம்
நிதானமும் தன் தவறை ஏற்றுக்கொள்ளும்
பக்குவமும் துளி கூட இல்லவே இல்லை


இப்போதெல்லாம்
போலித்தனங்களோடு
போராட முடியாது
அவைகளோடு
வாழ பழகிவிட்டோம்
பிடிக்காத விஷயங்களைக் கூட
இயல்பாய் பாராட்டி
கடந்துவிடுகிறோம்


ஆறுதல் என்னும் பெயரில்
குற்ற உணர்ச்சியை தூண்டும்
வார்த்தைகளிடம் இருந்து
செவியை செவிடாகவே
வைத்திருங்கள்


எதிரியிடம் கூட பழகு
ஆனால் காரியவாதியிடம்
ஒரு போதும் பழகாதே


இருந்தா
என்ன இல்லைனா
என்ன என
கேட்டவர்களிடம்
நான் இருக்கிறேன்
என உணர்த்துவது
தவறு என உணர்ந்தாச்சு


விருப்பங்கள்
சில நேரங்களில்
விரும்பியும்
கிடைப்பதில்லை


நம்பிக்கையை
விதைக்காமல்
அறுவடை செய்யா
முடியாது வெற்றியை


பொக்கிஷமாய்
சேர்த்து வைத்திருக்கிறேன்
உன் நினைவுகளை
யாரும் களவாடிட
முடியாத படி


பூட்டிய கதவினை
தட்டிக் கொண்டேயிருக்கிறேன்
என்றேனும் திறக்கும்
என்ற நம்பிக்கையில்


போலிகள்
மலிவதால்
உண்மைகள்
விலைமதிப்பற்று
போகிறது


நீங்கள்
கடலில் கல் எறிவதால்
கடலுக்கு வலிப்பதில்லை
கல் தான் காணாமல் போகும்
என் மீதான விமர்சனங்கள்
கல்லாக இருக்கட்டும்
நான் கடலாக


பனியாய் பொழிந்து
நதியாக மாறி
கடலோடு கலந்து
அலையாய்
துள்ளி விளையாடிய
நான் இன்று
தனியாய்
உன் நினைவோடு


சந்தோஷங்கள்
தேய்பிறையாய்
வலிகள்
வளர்பிறையாய்
தொடருதே


எப்பொழுதும்
அப்பொழுதாய்
இருப்பதில்லை
இப்பொழுது
அறியலானேன்
முற்பொழுதும்
உன் நினைவோடு


காலம் மனக்காயங்களையும்
கவலைகளையும்
மாற்றும் ஆனால்
அதன் வடுக்கள்
கடைசிவரை
நம்மோடு நிலைத்திருக்கும்


நிரூபித்து
சலித்துப்
போனவர்கள் கெட்டவர்களாகவே
வாழ்ந்துவிடுகிறார்கள்


பெருங்குரலெடுத்து அழும்
ஓர் இரவில்
கண்ணீர் துடைக்க
யாருமில்லாமல்
வெறுமையை
உணர்ந்தவர்கள்
வலி கொடியது


ஆணின் வெளிப்படுத்த
தெரியா
அன்பு ஏதோவோர்
நிமிடம் நமக்காய்
சிந்தும் ஒரு துளி
கண்ணீரில் வெளிப்படும்


சுவாரஸ்யமான நாட்கள்
அன்றே முடிந்து விட்டன
அதன் நினைவுகள்
முடியாமல்
ஒவ்வொரு நொடியும்
தொடருதே


கரை மீது
இடை விடாமல்
முட்டி மோதி
ஆரம்பிக்கிறது
அலைகள்
தீரா காதலால்


சம்பதமின்றி அழுதிடும்
என் உள்ளத்தினையும்
மீண்டும் மீண்டும்
வதைத்திடும்
உன் நினைவினையும்
எதைக் கொண்டு
சிறை செய்வேன்


நீளும் இரவுகளில்
நீளாமல் முடியுதே
பலரின் ஆசைகள்


வலிகளை சிறிதும்
வெளிக்காட்டாமல்
ஒற்றைக் கண்ணீரில்
மறைத்து வாழும்
தேவதை இவள்


மாறினேனா இல்லை
மாற்றப்பட்டேனா
தெரியவில்லை
ஆனால்
நான் நானாக
இல்லை என்பதே
இங்கு பலரின் மனநிலை


இரு இதயங்கள்
இணைந்து பேசிட
உலகில் பாஷைகள்
ஏதும் தேவையில்லை
புரிதல் ஒன்றே போதும்


யாரும் அறியாமுகம்
அனைவரிடமும் உண்டு
அது தெரியும்
வரை தான்
நீயும் நானும்
நல்லவர்கள்


இன்று இருக்கிறோம்
இது உண்மை
நாளை இருப்போமா
அது சந்தேகம்
என்றேனும் நாம் இறப்போம்
அது நிச்சயம்
இதுவே மனிதனின்
வாழ்க்கை
இதன் இடையில்
எது நிரந்தரம்


மனவலியை மறைக்க
தலைவலிக்குள்
ஒளிந்து கொள்கிறோம்
நிறைய தலைவலியில்
மறைந்திருக்கும்
ரகசியம் இதுவே


ஒன்றுமில்லை
என்ற வார்தைக்குள்
அடங்கி இருக்கிறது
பல வலிகளும்
சில சோகங்களும்


எதையும் எளிதாக
கடந்து போகும் மனநிலைக்கு
நாம் மாறுவது எல்லாம்
சாதாரணமானது அல்ல
அனைத்தையும் இழந்து
பிறகு கிடைக்கும்
ஒர் வெறுமை அது


சிலரின்
எதிர்பாராத வார்த்தைகளை
எளிதில்
கடந்து செல்ல
முடிவதில்லை
நம்மை உடைத்தே
விடுகிறது


நாம் பேசுவதை
எதிர்மறையான
அர்த்தங்களில்
புரிந்துகொண்டு
அவர்களே சரியென
வாதிடுபவர்கள்
தான் என்ற
கர்வம் கொண்டவர்கள்


இளைப்பாற ஒதுங்கிய
இடத்தில் வேதனை
சமயங்களில்
இந்த இணையமும்
அப்படி தான்


எழுதிய வார்த்தைகள்
கவிதை எனில்
எழுதப்படாத வார்த்தைகள்
காவியம்


உதாசினங்கள்
பழகிய பின்னர்
மனம் எதிலும்
ஆர்வம் கொள்ள
விரும்புவதில்லை


பெருங்குரலெடுத்து அழும்
ஓர் இரவில்
கண்ணீர் துடைக்க
யாருமில்லை என்னும்
வெறுமையை
உணர்ந்தவர்களின்
வலி கொடியது


கண்ணீரைக் கூட
உணர்ந்தால் தான்
மதிப்பு
உணராத உறவுகளுக்கு
வலியோடு கூடிய
நம் கண்ணீரும்
போலி தான்


அன்பில் சிறைப்பட்டு
சிறகடித்த இதயம்
இன்று சிறகொடிந்து
தனிமைச் சிறையில்
நினைவுகளோடு


உடைந்தழ முடியா
நேரங்களில்
கண்ணீரோடு
கூடிய புன்முறுவல்
மட்டுமே பதிலாக


எண்ணிலடங்கா
அர்த்தங்கள்
கொண்ட
மொழி
மெளனம்


சில வலிகளை
வார்த்தைகளால்
சுமக்க முடிவதில்லை
மனது மட்டுமே
சுமக்கிறது


ஆணின் வெளிப்படுத்த
தெரியாத அன்பு
ஏதோ
ஓர் நொடியில்
நமக்காய் சிந்தும்
ஒரு துளி
கண்ணீரில்
வெளிப்படும்


உன்னிடத்தில்
நான் யார்
என்பது
நீ என்னிடத்தில்
நடந்து கொள்ளும்
விதத்தை பொறுத்தே
அமையும்


கருவறைக்கும் மேலாய்
ஒரு சிம்மாசனம்
உண்டு என்றால்
அது தந்தையின்
இதயம்


விக்கல் வரும்போதெல்லாம்
யாரோ நம்மை நினைப்பதாக
எண்ணி நம் மனது
அவர்களை நினைக்கிறது


ரோஜாவில்
இருக்கும் முள்
ரோஜாவிற்கு
பாரமில்லை
அது ரோஜாவுக்கு
அரண்


எதுவும் நிரந்தரமில்லை
என தெரிந்தும்
எதையோ நிரந்தரமாக்கி
கொள்ள
தினமும் போராடிக்
கொண்டே
தான் இருக்கிறது
இந்த மனது


வலிக்கொண்ட
இதயத்தை தான்
மேலும் மேலும்
வார்த்தை என்னும்
வாள் வீசி
கிழிக்கிறார்கள்


உள்ளத்தின் உளறல்கள்
பலருக்கும் புரிவதில்லை
அது உடைந்து கிடந்தாலும்
கவனிக்க யாருமில்லை


உன் பலத்தை
அனைவரிடமும் சொல்
உன் பலவீனத்தை
யாரிடமும்
சொல்லி விடாதே
அதையே
உன்னை வீழ்த்தும்
ஆயுதமாக பயன்படுத்துவார்கள்


ஆணின் வெளிப்படுத்த
தெரியாத அன்பு
ஏதோ ஓர் நொடியில்
நமக்காக சிந்தும்
ஒரு துளி
கண்ணீரில்
வெளிப்படும்


பிரியங்கள்
என்ன செய்யும்
கோபத்தை கொட்டி
தீர்க்கவும் முடியாமல்
உரிமை கொண்டாடவும்
முடியாமல்
நம்மை புலம்ப
வைத்து பைத்தியமாக்கும்


விலகி போகும்
உறவுகளை விரட்டி
போகாதீர்கள்


மறக்கப்படுவதில்லை
பலர் மனதில்
மறைக்கப்படுகிறது
நேசம்


மனதுடைந்த தனிமைகள்
யாரிடமும் பரிமாற
விரும்பாத வலிகள்
வாழ்வின் சாபங்கள்


தொலைத்த‌ பொருட்கள்
திருப்பி கிடைக்கும்
ஆனால் தொலைத்த
அன்பு‌ திரும்ப
கிடைப்பது கடினம்


தொலைத்த அன்பையும்
தொலைந்த அன்பையும்
தேடி அலைகிறது
இந்த மனம்


காத்திருப்பில் தொடரும்
என் தேடல்கள் யாவும்
தீரா ஏக்கமாய்


கற்பனையில்
காவியம் வடிக்க
நீ என் கற்பனையல்ல
நினைவுகளில் கலந்த
என் நிஜம்


பிரிவெனும் துயரத்தில்
உழன்று கொண்டிருக்கும்
மனதில் தாங்கிட முடியா
ரணத்தின் வலிகள்


காயங்களே சற்று
வழி விடுங்கள்
மனமே நீ போ
கடந்த காலம் மறந்து
நிகழ்காலம் துறந்து
எதிர் காலம் துரத்தி போ
நாளைய விடியல்
நமக்கானதாய் கூட இருக்கலாம்


காலம்
கவலைகளையும்
மனக்காயங்களையும்
மாற்றும் ஆனால்
அதன்வடுக்கள்
இறுதி வரை
நம்மோடுபயணிக்கும்


கற்பனையில் வடிக்க
காவியமும் இல்லை
கலைந்து போக
என் கற்பனையுமல்ல
நினைவுகளில் கலந்த
என் நிஜம் நீ


நான் கொண்டாடப்பட்டாலும்
நான் புறக்கணிக்க பட்டாலும்
நான் நிராகரிக்கப்பட்டாலும்
நான் நானாக
இருந்திட வேண்டும்


சிறகுகள் இன்றியே
வானில் பறக்கிறேன்
நீ என்னை
தேவதை என்கையில்


நெருக்கங்கள் எல்லாம்
இடை வெளியாய்
இடை வெளிகள்
எல்லாம் வெற்று
இடங்களாய்


வாழ்க்கையில் நாம்
கண்ணாமூச்சி
விளையாடிய காலம்
போய்
இன்று காலம்
நம்மோடு கண்ணாமூச்சி
விளையாடுகிறது


சோகத்தில்
துளிர்விடும்
என் கவிதைகளும்
தனித்துவமாக
தான் திகழ்கிறது


ஏங்கிக் கிடத்தலில்
ஏதும் நடக்கப் போவதில்லை
என்றான பின்
நினைவுகளுடன்
வாழ்வின் பயணம்


இறப்பதற்கு
வாய்ப்பிருக்கிறது
என தெரிந்தும்
பிறப்பிற்கு வித்திடும்
தைரியசாலி பெண்


புரியாத
வாழ்க்கைப் பாதைகள்
தொடரும் வலி
நிறைந்த பயணங்கள்
முடியும் இடம் (மரணம்)
தேடி காத்திருக்கும்
நான்


பிறரால் காயப்பட்டவர்களை விட
பிடித்தவர்களால் காயப்பட்டவர்கள்
தான் அதிகம்


உடைத்து எறியப்பட்ட
பின்னர் தான்
சிலரின்
நிஜ முகங்கள்
நமக்கு
தெரியவருகிறது


நம் சுயமரியாதையை
இழந்து தான்
ஒர் உறவை
நம்மோடு தக்க
வைத்துக் கொள்ள வேண்டும்
என்றால்
அப்படி பட்ட
எந்த உறவும்
தேவையே இல்லை


பலரின் வாழ்க்கை
ஏக்கத்திலேயும்
ஆதங்கத்திலேயுமே
கழிகின்றன


பலநேரங்களில்
என் தனிமைக்கு
துணை
சில நினைவுகள்


சில நேசங்களை மறுத்தும்
சில நேசங்களை மறந்தும்
‌சில நேசங்களை மறைத்தும்
சில நேசங்களை புதைத்தும்
மரணித்து வாழ்கிறது
பல உள்ளங்கள்


வாழ்க்கை
நம்மை கோமாளியாகவும்
ஏமாளியாகவும் மாற்றி
மனக்காயங்களையும்
ரணங்களையும்
பரிசளித்து செல்கிறது


விருப்பங்களோடோ
விருப்பமின்றியோ
தொடர்கிறது
சில தனிமைகள்


கரை மீது
இடை விடாமல்
முட்டி மோதி
ஆர்பரிக்கிறது
அலைகள்
தீரா காதலால்


நாம் உடைத்து
எறியப்பட்ட
பின்னர் தான்
சிலரின்
நிஜ முகங்கள்
நமக்கு
தெரியவருகிறது


ஏதோ இருக்கிறேன்
என்ற ஒற்றை வார்த்தையில்
நமது மொத்த வலிகளும்
அடங்கி விடுகிறது


இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
இருளில் இருந்து தான்
வெளிச்சம் பிறக்கும்


கடலின் அலைகள்
எப்படி ஓயாமல்
போராடி கரை காண்கிறதோ
அதுபோல்
நானும் வாழ்வின்
போராட்டங்களோடு
போராடி
கரை காண
முயல்கிறேன்


சம்பதமின்றி அழுதிடும்
என் உள்ளத்தினையும்
மீண்டும் மீண்டும்
வதைத்திடும்
உன் நினைவினையும்
எதைக் கொண்டு
சிறை செய்வேன்


ஒருவரின்
குறைகளைக் காதலிக்க
கற்றுக் கொள்ளுங்கள்
இக்காலத்தின்
மிக அவசியத்தேவை
அதுவே


உதிர்ந்து போன
இறகொன்றின்
படபடப்பு
இப்போது
இவள் மனதில்


அந்த ஒற்றைக் குரல்
நம்மை எல்லாமுமாய்
ஆட்டி வைக்கும்
பித்துப் பிடிக்க செய்யும்
உயிரோடு எரியச் செய்யும்
பிணமான பின்னும்
சுவாசிக்கச் செய்யும்


கத்தியின் கூர்மை
ஒரு பக்கம் தான்
வார்த்தைகள்
எல்லா பக்கமும்
கூர்நிறைந்தது


காலங்கள் கண்டிப்பாக
மாற வேண்டும்
இல்லையேல்
சில காயங்கள்
மனதில் மாறாமல்
போய் விடும்


உன் நினைவினில்
என்னை நானே
தொலைத்து விடுகிறேன்


காயங்களுக்கு
நியாயங்கள் தேடாமல்
கடந்து போக
கற்றுக்கொள்
இந்த மாயமான
உலகில்


எனக்கே என்னை
பிடிக்குமென்பது
தற்பெருமையல்ல
தன்னம்பிக்கை


இருப்பதின் மகத்துவத்தை
இருக்கும்போதே
உணர்ந்திடுங்கள்
இழந்தப்பின்
உணரப்படுவதெல்லாம்
வலிகளின் உச்சமே


வாழ்வில்
புயலாய் நுழைந்து
அன்பெனும்
கோரதாண்டவம் ஆடி
நினைவென்னும்
துயரில் ஆழ்த்தி
நம்மை சின்னாபின்னமாக்கி
சென்றவர்களே அதிகம்


மெய்
எழுத்தாய்
இருந்தேன்
உயிர் எழுத்தாய்
வந்திணைந்து
உயிர்மெய்
எழுத்தாய்
மாறினோம்


தொடர்பு
கொள்ள முடியா
நேரங்களில்
மனம்
செய்வதறியாது
நினைவு
நிழற்குடையில்
தஞ்சமடைகிறது


இதயம் வலித்தாலும் சிரி
அது உடைந்தாலும் சிரி


இமை மூடினாலே
கனவாக வந்து
கொ(ல்)கிறாய்
விழிகளுக்குள்


எந்த ஒரு
எதிர்பார்ப்புமின்றி
எதார்த்தத்தை உணர்ந்து
வாழ காற்றுக்கொள்ள வேண்டும்
ஏமாற்றமாவது
இல்லாமல் இருக்கலாம்


தனிமையில்
விழிகளில்
பெருமழையின்
அடர்த்தி


உறவுகள்
தொலைந்தாலும்
உணர்வுகள்
மாறாது


நம்மை
அதிகம் விமர்சிப்பவனே
நம்மை கண்டு
அதிகம் பயப்படுகிறான்


பல தேடல்களுக்கும்
தேவைகளுக்கும்
ஒரேயொரு தீர்வு
மரணம்


என்றோ ஒருநாள்
புரிந்துகொள்ளப்படுவோம்
என்ற நம்பிக்கையில்
கடக்கப்படுகிறது
சில வருத்தங்களும்
சில வலிகளும்


உயிரின் வலி உணரும் தருணம் பிரிவு


வலி மறக்க
குடிப்பதாய்
கோழைக்காரணம்
சொல்லாதே
இளைஞனே
உன் தாயின்
பிரசவ வலியை
விடவா உன் வலி
பெரியது


பிடிக்கும் வரை
பொக்கிஷம்
வெறுக்கப்பட்டால்
வெறும் குப்பை
உறவுகளும்


புரிதல் எப்போது
தொலைந்து போனதோ
அன்றே பிரிவும் தொடங்கியது


ஆயிரம் நட்சத்திரங்கள்
விண்ணில் ஜொலித்தாலும்
ஒற்றை நிலவே
மனதில் நீங்கா
இடம் பிடித்து
நிலைத்து நிற்கிறது


உதாசினங்கள்
பழகிய பின்னர்
மனம் எதிலும்
ஆர்வம் கொள்ள
விரும்புவதில்லை


ஒருவரின் மனதை
மயிலிறகாக வருடுவதும்
நெருஞ்சிமுள்ளாக
குத்தி புண்ணாக்குவதும்
நாம் உதிர்க்கும்
வார்த்தைகள் தான்


வாழ்க்கை கேள்விகளால்
நிறைந்திருந்தாலும்
வாழ்க்கை ஒருபோதும்
பதிலை எதிர்பார்த்து
நிற்பதில்லை


கிடைத்தது ஒரு நாள்
தொலைந்து போகலாம்
பிடித்தது ஒரு நாள்
வெறுத்தும் போகலாம்
நிரந்தரம் என்று
ஏதும் இல்லை
இந்த உலகில்


ஒருவரை வீழ்த்த
இப்போதெல்லாம்
ஆயுதங்களை
பயன்படுத்துவதில்லை
அதிகம் அன்பையே
பயன்படுத்துகிறார்கள்


யாரையும் போல்
வாழ நினைக்காமல்
இதுதான் நான்
இதுதான் என் இயல்பு
என்று வாழ வேண்டும்


நீடித்த மௌனங்கள்
வார்த்தைகளால்
வர்ணிக்க
முடியாத வலிகளின்
மறைவிடம்


ஒரு ஆணிற்கு சமூகத்தில்
அதிக சுதந்திரம்
இருப்பதுபோல் தோன்றலாம்
ஆனால் அவன்
சாகும் வரை
அவனுடைய கடமைகளுக்கு
அவன் அடிமை


வெறுக்க ஆரம்பித்துவிட்டால்
சிறு வார்த்தையில் கூட
ஆயிரம் பிழைகள்
கண்டுபிடிப்பார்கள்


இறுக பூட்டிய
மனங்களையும்
சில நேரங்களில்
துளைத்து படர்கிறது
அன்பு


கத்தியின் கூர்மை
ஒரு பக்கம் தான்
வார்த்தைகளின்
கூர்மை எல்லா
பக்கமும்


ஒருவர் தரும்
ஏமாற்றம் போதும்
யாரையும்
நம்பாமல் போவதற்கு


புத்தகத்தின் நடுவில்
ஒளித்து வைத்துள்ள
மலர் மட்டுமல்ல
இதயத்தின் நடுவில்
மறைத்து வைத்த
சில நினைவுகளும்
ச௫கானது இன்று


மனதின்
மௌன ஓலங்களை
யாரும் அவ்வளவு
எளிதாக உணர்வதேயில்லை


புரிதல் இல்லாத உறவுகள்
பாதியில் விட்டு விலகி செல்லும்
உணர்வு பூர்வமான புரிதல்
கொண்ட உறவுகள் மட்டுமே
நம்முடன் இறுதி வரை பயணிக்கும்


பார்பதற்கு அழகாகவும்
மனதளவில் இறந்த
பிணங்களாகவும்
வாழ்கின்றனர் பலர்


சில நினைவுகளை
மீட்டும் போதெல்லாம்
கண்கள்
ஈரமாகிவிடுகிறது
கண்ணீர்


எதற்க்கும் முற்றுப்புள்ளி
என்பது முடிவல்ல
முற்றுப்புள்ளி
கூட தொடர்ந்தால்
தொடரும் என்பதே


Peoples are Temporary
என்பதை ஏனோ
மனம் ஏற்க மறுக்கிறது


இமை மூடினாலே
கனவாக வந்து
கொ(ல்)கிறாய்
விழிகளுக்குள்


உதாசீனப்படுத்தும்
ஒவ்வொரு நொடியும்
மரணிக்கிறோம்
மனதளவில்


உடல் வலியை விட
அதிக வலி
மிகுந்தது மனவலி


பிரியங்களை
வார்த்தைகளில்
அலங்கரிக்க
தேவையில்லை
செயல்களில்
உணர்த்திவிடுங்கள்


பிரிவு என்று ஒன்று
இருப்பது தெரிந்தும்
எந்த மனமும் பிரிவை
விரும்புவதில்லை
மரணத்தில் கூட


நெருக்கங்கள்
எல்லாம்
இடை வெளியாய்
இடை வெளிகள்
எல்லாம்
வெற்றிடங்களாய்


மனதைக் கவரும்
குழந்தைகளின்
புன்னகை கண்கள்
அசையாமல்
பார்க்குமே


கண்ணீருக்கு வெட்கமேயில்லை
உதறியவர்களுக்காகவே
வீணாகித்தொலையுதே


தொலைவாய் போன
தேடல்கள் அனைத்தும்
அருகில் இருக்கும் போது
தொலைக்கப்பட்டவையே


இரவில்
மனதில் உதித்த
கவிதைகள்யாவும்
காணமலே போனது
காலையில் எழுத
நினைக்கையில்


தீராத ௭ன்
சிந்தனைகளை
மொழிப்பெயர்க்க
காத்திருக்கிறேன் கவிதையாய்


வெள்ளை காகிதத்தில்
வெறுமையாய் கிறுக்கி
கொண்டிருந்த
என்னை ரசனையாய்
எழுத வைத்தது
நினைவுகள்


(தனிமை)
சில நேரம்
மறக்க வேண்டிய
சில விஷயங்களை
நினைக்க வைக்கும்
சில நேரம் நினைக்க
வேண்டிய விஷயங்களை
மறக்க வைக்கும்


இது எல்லாம்
நிஜம் நம்மோடு இருக்கும்
என்று எண்ணும்
போதெல்லாம்
எதுவும்
நிரந்தரமில்லை
என்று சொல்லி தருகிறது
இந்த வாழ்க்கை


இணைய தளம்
ஒரு கடல் போல
அதில் நீ மிதக்க
கற்றுக்கொள்
மூழ்கி விடாதே


அதிகப்படியான அன்பு கூட
சில சமயங்களில்
அர்த்தமில்லாமல் போகும்


சிறகுகள் இன்றியே
வானில் பறக்கிறேன்
மகிழ்ச்சியில் நான் திளைக்கையில்


சிலருக்கு
அவர்கள் தேடும் அன்பானது
முழுமையாக கிடைத்து
விடுவதில்லை
தீராத ஏக்கங்களுடனேயே
வாழ்வை கழிக்கிறார்கள்


வலிகள் எல்லாம்
மறைந்து போக
வேண்டும்
கரையும் பனிதுளியாக


நீளும் இரவுகளில்
நீளாமல் முடியுதே
பலரின் ஆசைகள்


சத்தத்துடன் வரும்
இடியை விட
சத்தமில்லாமல் வரும்
மின்னலின் பாதிப்பு
அதிகம்


இரவின் நிசப்தம்
சில தனிமையை ஆட்கொள்ளும்
சில நினைவலைகளால்
விழியோரம் துளிர்க்கும்
கண்ணீர் துளிகள்
சில தலையணைகளுக்கே சொந்தம்


இற்றுப்போன
இதயத்தில்
பாழாய்ப்போன
நினைவுகளின்
வலி


என்னுள் துளிர்விடும்
என் கவிதைகளும்
தனித்துவமாகவே திகழ்கிறது


இப்படியும் சிலர்
அப்படியும் சிலர்
அனைவருக்கும்
மத்தியில் வாழ
பழகிக்கொள்ள
வேண்டியது காலத்தின்
கட்டாயம்


எழுத்துக்களை கோர்த்து
வார்த்தைகளாக்கி
எழுதி வைக்கிறேன்
அதை நேசிப்பதும்
துசிப்பதும் உங்கள் விருப்பம்
வடிவமைப்பது மட்டுமே
என் விருப்பம்


சண்டைக்கு பின்
தானாக முன்வந்து
கேட்கப்படும் ஒவ்வொரு
மன்னிப்பும்
அன்பைத் தக்கவைப்பதற்கே


சிந்தனையும்
சிதைந்து போனது
சில நினைவுகள்
சிறை பிடித்த பின்


அன்பு என்ற விதையை
விதைக்கும்போதே
பிரிவு என்ற
அறுவடை நாளும்
எழுதப்படுகிறது


தவறுகள்
நிதானமாகவும்
முறையாகவும்
நடக்கும் போது
அவை நியாயங்களாகி
விடுகின்றன


யாரோவாக வந்து
யாதுமாக மாறி
பின் யாரோவாகி
போவது தான்
அன்பு


எளிதாக
ஏற்றுக் கொள்ள
முடிவதில்லை
எதிர்பார்ப்புகள்
பொய்த்துப்போகும்
தருணங்களை


காத்திருப்பின் சுகத்தினை
கற்றுக்கொடுத்த அதே
காலம் தான்
ஆற்றிட முடியா பெரும்
வலியை எனக்குள்
விதைத்து போயிருக்கிறது


எந்தன் பலம்
பலவீனம் நீயே
என அறிந்த பின்னரும்
அலட்சியமாக எனை
கடந்து போக
முயற்சிக்கிறாய்


தொலைந்து போன
கடந்த காலத்தில்
நம்மை தேடி
கொண்டிருக்கிறோம்
பலரும் இப்பொழுது


கொண்டாடப்படுவதை விட
உணர்வுகள்
மதிக்கப்படுவதையே
பெண்கள் அதிகம்
எதிர்ப்பார்க்கின்றனர்


எழுதி முடிக்கப்படாத
பக்கங்களின்
இறுதி தீர்ப்பு
கண்ணீர்


மரணம்
சில நேரங்களில்
வார்த்தைகளால்
கூட நிகழலாம்


வாழ்வில் புயலாய் நுழைந்து
அன்பெனும் கோரதாண்டவம்
ஆடி நினைவென்னும்
துயரில் ஆழ்த்தி
நம்மை
சின்னாபின்னமாக்கி
செல்பவர்களே அதிகம்


நம்முடைய
ஒவ்வொரு செயலும்
யாரோ ஒருவருக்கு
தவறாக தான் தெரியும்
அதற்காக நம்மை
மாற்றிக் கொண்டே
இருந்தால்
நம் சுயம்
இழக்க நேரிடும்


அன்பு
கிடைக்காதவர்களுக்கு தேடல்
கிடைத்தவர்களுக்கு பொக்கிஷம்


உதிர்ந்து போன
இறகொன்றின்
படபடப்பு
இப்போது
இவள் இதயத்தில்


விருப்பங்கள் இடைவெளி
விட்டு விலகி நிற்பது
மிக பெரிய வேதனை


எந்த ஒரு
எதிர்பார்ப்புமின்றி
எதார்த்தத்தை உணர்ந்து
வாழ காற்றுக்
கொள்ள வேண்டும்
ஏமாற்றம்
இல்லாமல் இருக்கலாம்


இற்றுப்போன
இதயத்தில்
பட்டுப்போன
நினைவுகள்


தேவை எனில்
முகவரி தேடுவதும்
தேவை முடிந்ததும்
முகங்களையே
மறந்து விடுவதும்
உலகத்தின் மனித இயல்பு


பூமியே தாங்காது
ஒரு பூவைச்
சிதைப்பாயெனின்
நீயும் சிதைந்தே
போவாய்


இங்கு பலரும்
நினைத்த வாழ்வை
வாழ முடியாமல்
நிலைமைக்கு
ஏற்ற வாழ்வையே
வாழ்கிறார்கள்


பலரோடு அன்பாய்
அழகாய் பேசலாம்
நம் அன்பை
உணர்ந்தவர்களிடம்
மட்டுமே உணர்வோடு
பேச முடியும்


தவிக்கவிடும்
தனிமையும்
உணர்த்துகிறது
உன் நெருக்கத்தை


ஒருவரின் மனதை
மயிலிறகாக வருடுவதும்
நெருஞ்சிமுள்ளாக குத்தி
புண்ணாக்குவதும்
நாம் உதிர்க்கும்
வார்த்தைகள் தான்


அழியாத நினைவுகளை
மட்டுமே சுமந்து கொண்டு
இங்கு பல
ஜீவன்கள் வாழ்கின்றனர்


தனிமையின் தவிப்பை
உணரும் தருணங்களில்
துணையாக நினைவுகள்


தன்னை நேசிக்கவும்
கொண்டாடவும்
ஒரு ஆண் இருக்கும் போது
பெண்ணின் கர்வம் தலைதூக்குகிறது


சிறகை விரித்து பறக்க
எத்தனிக்கையில் முதல்
இறகு பிடுங்கப்படுவது கொடுமை


நான் புதிரா புதையலா
புரிந்தவர்களுக்கு புதையலாகவும்
புரியாதவர்களுக்கு புதிராகவும்
இருக்கவே விரும்புகிறேன்


நேசத்தின் பிடியில்
சிக்கி விடாதீர்கள்
இரக்கமற்றவர்களின்
கூடாரம் அது


எதை மறக்க
நினைக்கிறோமோ
அதையே மறக்காமல்
மறு ஒளிபரப்பு செய்கிறது
இந்த மனது


நினைத்திருக்கவில்லை
இறந்த காலத்தில்
இத்தனை ரம்மியம் இருந்திருக்குமென்று கடந்த நாட்களெல்லாம்
நினைவுகளாய் போய்விடுமென்றும்


கஷ்டங்களை
தாங்கும் சக்தி
அற்று போனதால்
உருகிவழிகிறது
கண்கள்


அன்பு என்றாலே
அழகு தான்
அதை நம் மனதிற்கு
பிடித்தவர்கள்
தரும் போது
பேரழகு


நிரம்பி இருக்கும் போது
கொண்டாட மனம் இல்லாதவர்கள்
வெற்றிடம் ஆன பின் தேடுகிறார்கள்


அன்புக்காக ஏங்கபவர்களுக்கு
அன்பானவர்கள் கிடைப்பதில்லை
அன்பானவர்கள்
கிடைத்தவர்களுக்கு
அன்பை
புரிஞ்சுக்க தெரியவில்லை


சிந்திக்க
ஆயிரம் இருந்தும்
சிந்தை முழுவதும்
உன் நினைவுகளே


ஒருவருடைய
அன்பிற்காக எத்தனை
முறைதான்
நாமே நம்மை
பலியிட்டுக்கொள்வது


அந்த ஒற்றைக் குரல்
நம்மை எல்லாமுமாய்
ஆட்டி வைக்கும்
பித்துப் பிடிக்க செய்து
உயிரோடு எரியச் செய்யும்
உயிரோடு பிணமான பின்னும்
சுவாசிக்கச் செய்யும் வலிகளோடு


இரவில்
மனதில் உதித்த
கவிதைகள் யாவும்
காணமலே போனது
காலையில் துயில்
கலைகயில்


உடையும் நேரங்களில்
உன்னத காப்பகமாய்
ஒளிந்து கொள்ள
தலையணை
ஒன்றே துணையாய்


வாழ்க்கை என்பது
புரிந்த பயணம் அல்ல
புயலுக்கும் பூகம்பத்துக்கும்
இடையில்லான புரியாத
போராட்ட பயணம்
இங்கு வெற்றிகள்
வெகு சில
தோல்விகளோ மிகப்பல


சிரிக்க வைத்து
சிந்திக்க வைத்து
பலமென
உணர வைத்து
பலவீனபடுத்தி பக்குவப்படுத்துவதே
அன்பு


அதிகப்படியாக கொண்டாடிய அனைத்தும் இன்று சுவடே தெரியாமல்


பேசி பேசியே
என்னுள் நுழைந்த நீ
பேசாமல் போகையில்‌ புரிகிறது
என்னுள் எவ்வளவு
ஆழம் ஊடுருவி இருக்கிறாயென்று


உன்னில் தொடங்கி
உன்னிடமே முடிகிறது
என் தேடல்


தேவைப்படும்
பொருளாக இல்லாமல்
தேடப்படும் இதயமாக
வாழ கற்றுக்கொள்ளுங்கள்


தொலைவில் நின்று ரசிக்கும் வரை‌ தான் எல்லாமே அழகு


புரிதலுக்கும்
பிரிதலுக்கும்
இடைப்பட்டது
அன்பு


நேற்று நேசங்களின்
அடர்த்தியில்
இன்று பிரிவின்
வெறுமையில்


வேண்டாம் என்று
விலகிய பின்னும்
விடாமல்
பின் தொடர்கிறது
ஞாபகங்கள்


யாரோ
எழுதிய
கவிதைகள் உனக்கானவையாக
மாறிப்போவதை
தடுக்கவும்
முடியவில்லை


அருகில் இல்லா
பொழுதுகள் நீண்டு
தவிப்புகளை அதிகமாக்கி
நினைவுகளால் வதைப்பதேனோ


கவிதை எழுத
வார்த்தை தேடுகையில்
தோற்றேபோனேன்
உன் பெயரை விட
சிறந்த கவிதை ஏது
அன்பானவனே


காயங்களே சற்று
வழி விடுங்கள்
மனமே நீ போ
கடந்த காலம் மறந்து
நிகழ்காலம் துறந்து
எதிர் காலம் துரத்தி போ
நாளைய விடியல்
உனக்கானதாய் கூட இருக்கலாம்


காத்திருப்பின் சுகத்தினை
கற்றுக்கொடுத்த அதே
காலம் தான்
ஆற்றிட முடியா பெரும்
வலியையும்
விதைத்து போகிறது


ஒரு நிராகரிப்பு
நம்மை உயிரோடு கொன்று
உயிரோடு பிணமாக்கும்
வலிமை வாய்ந்தது
வலி


என்றோ உங்களையும்
யாரோ ஒருவர்
விமர்சித்திருக்கக் கூடும்
இன்று விமர்சிக்கும் இடத்தில்
நீங்கள் இருந்தாலும்
விவரிக்கும் இடத்தில் நானில்லை


சுழ்நிலை கைதியாக நானும்
தனிமையை தேடும்
என் மனமும்
சுயநலம் மிகுந்த வாழ்க்கையில்
சிரிப்பதை மறந்தேன்


கவிதை
எழுத முனைகிறேன்
உன்னிடம் சொல்லத்
தவறிய
என் உள்ளத்தின்
நேசத்தை வார்த்தைகளால்


என்னில் இருந்து நீங்கள்
எடுத்துக் கொண்டது போக
மிச்சமிருப்பது
இந்த மௌனம் மட்டுமே


இந்த மனசு
நம்மள உதாசீனப்படுத்துறவங்க
கிட்ட தான்
ஒரு வார்த்தை
பேசிட மாட்டாங்களான்னு
ஏங்கி நிற்குது


சொல்லமுடியாத
சோகங்களும்
நினைவுகளும்
இங்கு பலரின்
மனதிலும் உண்டு
யாரும் அதை
மறந்து வாழ்வதில்லை
மறைத்து தான் வாழ்கிறோம்


ஒரு விரக்தி சிரிப்பென்பது
ஆயிரமாயிரம்
வலிகளையும் கண்ணீரையும்
உள்ளடக்கியிருக்கும்


விருப்பமின்றி அழிக்கப்படும்
தொலைபேசி எண்களெல்லாம்
மனதை ரணப்படுத்தியே செல்கிறது


விட்டு விலகாமல்
விடுமுறை இன்றி
போர் தொடுக்கிறது
சில நினைவுகள்


பெண்ணின் பெருமை
தாய்மை
பெண் சுமக்கும்
முள்கிரீடம்
பெண்மை


முள்ளாய்
குத்தும் வார்த்தைகளை விட
மௌனம் சிறந்தது
சில நேரங்களில்


உரிமையின் எல்லை
எதுவென தெரிந்த பிறகு
உறவை தொடர்வதில்
அர்த்தமில்லை


நாம் ஒருவரை
தேடவில்லை என்றால்
அவர்கள் நம்மை
தொலச்சிட்டாங்கனு அர்த்தம்


எதை மறக்க
நினைக்கிறோமோ
அதையே மறக்காமல்
மறு ஒளிபரப்பு செய்கிறது
இந்த பாழாய் போன
மனது


கொண்டாடி தீர்த்த
கணங்கள் யாவும்
பிரிதொரு நாள் ரணமாய்


அதிகமான
அன்பை விட
புரிதல்கள் தான்
உறவை நீண்ட
காலம் வாழ வைக்கும்


நினைத்திருக்கவில்லை
இறந்த காலத்தில்
இத்தனை ரம்மியம்
இருந்திருக்குமென்று
கடந்த நாட்களெல்லாம்
வெறும் நினைவுகளாய்
போய்விடுமென்றும்


என் மௌனம்
என் திமிர் தான்
அதுக்கு என்ன இப்போ


நிகழ்தவைக்கெல்லாம்
காரணம் தேட முயற்சிக்காதே
நிகழ்ந்து முடிந்துவிட்டது
அவ்வளவே


தொலைத்து நிற்கும்
எனையே தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்னில்


விருப்பங்களோடோ
விருப்பகளின்றியோ
தொடர்கிறது
சில தனிமைகள்
காலத்தின்
கட்டாயத்தால்


எதுவும் புரியா கனவிற்கும்
எல்லாமும் தெரிவிக்கும்
நிஜத்திற்கும்
இடையே சிக்கி தவிக்கிறது
வாழ்க்கை


Related